உணவு மற்றும் உடல் நிலை
Labels: lactogen no 1 0 commentsஇங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் HIV + VE பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலர் தாய் மற்றும் தந்தை இறந்தபின் , உறவினர்களால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள் .
சிலர் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெற்றோரால் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்தவர்கள்.
இந்த குழந்தைகள் தற்போது மிக்க நலமுடன் உள்ளனர்.
இவர்கள் தினமும் நல்ல உணவு உண்டால் இன்னும் பல்லாண்டு உயிர் வாழ முடியும் .
நல்ல உணவு என்றால் சரிவிகித உணவு மட்டுமே . நீங்கள் நினைப்பது போல இவர்கள் மற்ற குழந்தைகள் போல எல்லா வகை உணவுகளும் சாப்பிட முடியாது.
உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் மற்றும் பலவற்றை ஆராய்ந்து (ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப ) தான் உணவளிக்க வேண்டும்.
இல்லையெனில் ஒரு சிறிய காய்ச்சல் கூட உயிரிழப்பு வரை கூடடிச்சென்று விட்டு விடும்.
இங்கே உள்ள இரண்டு புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் அளிக்க இயலாத காரணத்தால் LACTOGEN NO-1 MILK POWDER தேவைப்படுகிறது.
ஒரு அட்டை பெட்டியின் விலை 165 ரூபாய் (for 450 gram box).
ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு minimum 6 பெட்டிகள் தேவைப்படுகிறது .
மற்ற குழந்தைகளுக்கு கூட ஒருநாள் சாப்பாடு இல்லையெனில் பட்டினி போட முடியும்.
ஆனால் இந்த இரண்டு குழந்தைகளுக்கு MILK POWDER இல்லையெனில் வேறு வழியே இல்லை .
ஆறு , ஏழு மாதங்கள் வரை பசும்பால் கொடுக்க முடியாது(Because their body immunity level may go too dangerous due to MILKFEEDING ) .
0 comments: to “ உணவு மற்றும் உடல் நிலை ”
Post a Comment