Saturday, November 15, 2008

குகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை  

0 comments

குகன் கவிதைகள்: எய்ட்ஸ் குழந்தை: "பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
'தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை'
பால்வினை நோயின் நீதியாம் !"

இன்னும் வாழனும் நூறு ஆண்டு ?!?............  

0 comments

அன்பகம் காப்பகக் குழு  

0 comments

திண்டுக்கலில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து "அன்பகம் காப்பகக் குழு " என்ற பெயரில் ஒரு குழுவை ஆரம்பித்துள்ளோம் .....
இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு மாதமும்,ஒரு குறிப்பிட்ட அளவு நிதி அளித்து , இந்த குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர்(milk powder) ,மற்றும் இன்ன பிற உதவிகள் செய்து வருகின்றனர் ....

orkut நண்பர்களுக்கு நன்றி ! நன்றி!  

0 comments

இந்த blogspot & Orkut profile ஆரம்பித்து மூன்று மாதத்திற்குள் சுமார் 201 பேர் ORKUT FRIEND ஆக சேர்ந்துள்ளார்கள் ....,


இதில் பலர் இந்த இல்லத்திற்கு தானும் தன் நண்பர்களும் சேர்ந்து கட்டாயம் உதவுவதாக திரு .தங்கச்சன் அவர்களிடம் (94427 49959) தொலைபேசியில் தெரிவித்துள்ளார்கள் ....

அது மட்டுமில்லாமல் தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்துள்ளனர்...

இதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் அமையட்டும் .......

இவை எல்லாம் உங்களைப் போன்ற நல்ல உதவும் எண்ணம் கொண்டவர்கள் ஆல் தான் சாத்தியம் ஆயிற்று.......

நன்றி ! நன்றி!

Wednesday, November 12, 2008

ஒரு ரூபாய்க்கு ஒரு உயிர் திட்டம்  

2 comments

அன்பகம் என்ற இந்த இல்லம் 2003 ஆம் ஆண்டு திண்டுக்கலில் HIV பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக துவக்கப்பட்டது.

இந்த இல்லத்தின் மூலம் இதுவரை பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 96.
தற்போது சுமார் குழந்தைகள் தங்கி உள்ளனர் . அனைவரும் ஆதரவற்றவர்கள் .அதாவது தாய், தந்தை இறந்தபின் உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் .

இவர்களில் ஒன்பது பேர் பள்ளி செல்லும் குழந்தைகள்.

இரண்டு பேர் தொட்டில் குழந்தைகள்.

மீதிப் பேர் 2-5 வயதினர் .

HIV பாதிக்கப்பட்ட கைம்பெண்கள் இவர்களை பராமரிக்கின்றனர் .
இந்த பெண்களில் சிலர் உறவினர்களால் தன் கணவன் இறந்தபின் வீட்டை விட்டு துரத்ததப்பட்டு வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சி செய்தவர்கள் .

இவர்களை போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து மறுவாழ்வு அளிக்கும் பணியை அன்பகம் செய்து வருகிறது.


அன்பகம் தற்போது நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுகிறது..மேலும் இது வாடகை மற்றும் இன்ன பிற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தன் முகவரியை மாற்றியது ...

தற்போது இருக்கும் வாடகை இல்லத்தையும் மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. தற்போது இருக்கும் வாடகை இல்லம் மிகவும் சிறியது . 4-5 பேர் மட்டுமே தங்க முடிந்த இடத்தில் 27 பேர் தங்கிஉள்ளனர்.

உங்களுக்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் உங்கள் பள்ளி , கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றி பேசுங்கள்.......



ஒரு நபருக்கு ஒரு ரூபாய் உங்களால் கொடுக்க முடியுமா ?


[ஒவ்வொரு மாதமும் குறைந்தது (ONE RUPEE) ஒரு ரூபாய் ]

என்று யோசியுங்கள் ....................

உங்களில் பத்து பேர் இந்த திட்டத்திற்கு முன்வந்தால் கூட மாதத்திற்கு பத்து ரூபாய் திரட்ட முடியும் .........


அப்படி முடிந்தால் மாதம் 10 ரூபாய் குறைந்த பட்சம் உங்களால் அன்பகத்திற்கு உதவ முடியும்..

----------------------------------------------------------------------

உங்களுக்கு தெரியுமா ?

அந்த ஒரு ரூபாய் ஒரு குழந்தைக்கு ஒரு நாள் இன்னும் இந்த உலகில் வாழ உதவும் ....



உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் ,

இந்த பத்து ரூபாய் மிகவும் குறைவாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள் ..........

இது இவர்களை போல இன்னும் பலர் உயிர் வாழ உதவட்டும் ...,

Sunday, November 9, 2008

உணவு மற்றும் உடல் நிலை  

0 comments

இங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் HIV + VE பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிலர் தாய் மற்றும் தந்தை இறந்தபின் , உறவினர்களால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள் .

சிலர் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெற்றோரால் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்தவர்கள்.

இந்த குழந்தைகள் தற்போது மிக்க நலமுடன் உள்ளனர்.

இவர்கள் தினமும் நல்ல உணவு உண்டால் இன்னும் பல்லாண்டு உயிர் வாழ முடியும் .

நல்ல உணவு என்றால் சரிவிகித உணவு மட்டுமே . நீங்கள் நினைப்பது போல இவர்கள் மற்ற குழந்தைகள் போல எல்லா வகை உணவுகளும் சாப்பிட முடியாது.

உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் மற்றும் பலவற்றை ஆராய்ந்து (ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப ) தான் உணவளிக்க வேண்டும்.

இல்லையெனில் ஒரு சிறிய காய்ச்சல் கூட உயிரிழப்பு வரை கூடடிச்சென்று விட்டு விடும்.


இங்கே உள்ள இரண்டு புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் அளிக்க இயலாத காரணத்தால் LACTOGEN NO-1 MILK POWDER தேவைப்படுகிறது.


ஒரு அட்டை பெட்டியின் விலை 165 ரூபாய் (for 450 gram box).

ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு minimum 6 பெட்டிகள் தேவைப்படுகிறது .



மற்ற குழந்தைகளுக்கு கூட ஒருநாள் சாப்பாடு இல்லையெனில் பட்டினி போட முடியும்.

ஆனால் இந்த இரண்டு குழந்தைகளுக்கு MILK POWDER இல்லையெனில் வேறு வழியே இல்லை .

ஆறு , ஏழு மாதங்கள் வரை பசும்பால் கொடுக்க முடியாது(Because their body immunity level may go too dangerous due to MILKFEEDING ) .