ஒரு ரூபாய்க்கு ஒரு உயிர் திட்டம்
Labels: one rupee scheme, ஒரு ரூபாய் = ஒரு உயிர் 2 commentsஅன்பகம் என்ற இந்த இல்லம் 2003 ஆம் ஆண்டு திண்டுக்கலில் HIV பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக துவக்கப்பட்டது.
இந்த இல்லத்தின் மூலம் இதுவரை பயன் பெற்றவர்கள் எண்ணிக்கை 96.
தற்போது சுமார் குழந்தைகள் தங்கி உள்ளனர் . அனைவரும் ஆதரவற்றவர்கள் .அதாவது தாய், தந்தை இறந்தபின் உறவினர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் .
இவர்களில் ஒன்பது பேர் பள்ளி செல்லும் குழந்தைகள்.
இரண்டு பேர் தொட்டில் குழந்தைகள்.
மீதிப் பேர் 2-5 வயதினர் .
HIV பாதிக்கப்பட்ட கைம்பெண்கள் இவர்களை பராமரிக்கின்றனர் .
இந்த பெண்களில் சிலர் உறவினர்களால் தன் கணவன் இறந்தபின் வீட்டை விட்டு துரத்ததப்பட்டு வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சி செய்தவர்கள் .
இவர்களை போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து மறுவாழ்வு அளிக்கும் பணியை அன்பகம் செய்து வருகிறது.
அன்பகம் தற்போது நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுகிறது..மேலும் இது வாடகை மற்றும் இன்ன பிற காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளில் 10 முறை தன் முகவரியை மாற்றியது ...
தற்போது இருக்கும் வாடகை இல்லத்தையும் மாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. தற்போது இருக்கும் வாடகை இல்லம் மிகவும் சிறியது . 4-5 பேர் மட்டுமே தங்க முடிந்த இடத்தில் 27 பேர் தங்கிஉள்ளனர்.
உங்களுக்கு உதவி செய்ய எண்ணம் இருந்தால் உங்கள் பள்ளி , கல்லூரி மற்றும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றி பேசுங்கள்.......
ஒரு நபருக்கு ஒரு ரூபாய் உங்களால் கொடுக்க முடியுமா ?
[ஒவ்வொரு மாதமும் குறைந்தது (ONE RUPEE) ஒரு ரூபாய் ]
என்று யோசியுங்கள் ....................
உங்களில் பத்து பேர் இந்த திட்டத்திற்கு முன்வந்தால் கூட மாதத்திற்கு பத்து ரூபாய் திரட்ட முடியும் .........
அப்படி முடிந்தால் மாதம் 10 ரூபாய் குறைந்த பட்சம் உங்களால் அன்பகத்திற்கு உதவ முடியும்..
----------------------------------------------------------------------
உங்களுக்கு தெரியுமா ?
அந்த ஒரு ரூபாய் ஒரு குழந்தைக்கு ஒரு நாள் இன்னும் இந்த உலகில் வாழ உதவும் ....
உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் ,
இந்த பத்து ரூபாய் மிகவும் குறைவாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள் ..........
இது இவர்களை போல இன்னும் பலர் உயிர் வாழ உதவட்டும் ...,
November 12, 2008 at 5:37 PM
How to contact the person concerned?
February 12, 2009 at 8:11 PM
how can contribute for this? any Bank account no.?